யாழ். – ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற குழியிலிருந்து 11 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுமிகளின் சடலங்கள் நேற்று (01) இரவு மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமிகள் இருவரும் நேற்று (01) பிற்பகல் துவிச்சக்கர வண்டியில் அருகிலுள்ள கடையொன்றுக்கு சென்றிருந்த நிலையில், வீடு திரும்பாதமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணையின் போது, குழி ஒன்றிலிருந்து குறித்த இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சடலங்கள் ஊர்காவற்துறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (02) இடம்பெறவுள்ளன.
உயிரிழந்த இருவரும் சகோதரிகள் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.