NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாதுக்க பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பாதுக்க – வல்பிட்ட கெமுனு மாவத்தையில் இன்று (05) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 62 வயதுடைய நபர் தற்போது ஹோமாகம ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நபரின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும் ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles