NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்றத்தில் குழந்தைக்கு பாலூட்டிய எம்.பி – நெகிழ்ச்சியான சம்பவம் பதிவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இத்தாலி நாட்டின் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த எம்.பி கில்டா ஸ்போர்டெல்லோ கைக்குழந்தையான தனது மகனுக்கு பாலூட்டிய சம்பவத்தை சக பாராளுமன்ற எம்.பிக்கள் பாராட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராளுமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அரவது குழந்தை திடீரென அழத்துவங்கியது. உடனே பாராளுமன்றம் அமைதியானது. எனினும், குழந்தை அழுவதை நிறுத்தவில்லை.

குழந்தை பசிக்காக அழுகிறது என்பதை அறிந்துகொண்ட எம்.பி கில்டா அங்கேயே தனது மகனை ஆசுவாசப்படுத்தி பாலூட்ட தொடங்கினார். இவரின் செய்கையை பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்து வந்தனர். அவையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய எம்.பியை சக பாராளுமன்ற உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியதோடு, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

‘அனைத்து கட்சிகளும் ஆதரவளிப்பது இதுவே முதல்முறை. ஃபெடரிகோவுக்கு நீண்ட, சுதந்திரமான மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள். தற்போது நாம் அனைவரும் சற்று அமைதியாக பேச தொடங்குவோம்,’ என சபாநாயகர் ஜார்ஜியோ மியூல் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles