NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பா.ஜ.கவுடன் கூட்டணி முறிவு – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம் !

பா.ஜ.க உடனான கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பா.ஜ.கவுடன் இனி கூட்டணி இல்லை என்பதை நான் தெளிவாக கூறிவிட்டேன். பா.ஜ.க உடனான கூட்டணி முறிவு என்பது 2 கோடி தொண்டர்களின் முடிவு. கூட்டணி முறிவு என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம்; எந்த மாற்றமும் இல்லை. தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் அடிப்படையில்இ தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க விலகியது.

தமிழ்நாடு பா.ஜ.க தலைவரை மாற்ற வேண்டும் உள்ளிட்டஇ எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க வைக்கவில்லை. கூட்டணி தொடர வேண்டும் என அவரவர்களின் விருப்பத்தை கூறுவது பற்றி நான் என்ன சொல்வது?. கூட்டணி நீடிக்கும் என வி.பி.துரைசாமி கூறியது குறித்து அவரிடமே கேட்க வேண்டும்.

எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க கூட்டணியில் சேரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே அ.தி.மு.க தோல்வியடைந்தது. வரும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க அமைக்கும் கூட்டணி 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெறும். தி.மு.க அரசு 10மூ வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. வாக்குறுதிகள் நிறைவேற்றம் தொடர்பாக முதல்-அமைச்சர் கூறுவது பொய்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தது தொகுதி நலனுக்காகவே. தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினர். தி.மு.க அமைச்சர்கள் டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா?. தமிழ்நாட்டிற்கு வரும் மத்திய அமைச்சர்களின் நிகழ்ச்சிகளில் தி.மு.கவினரும் பங்கேற்கின்றனர்.

காவிரி நீரைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தி.மு.கவுக்கு ஆட்சி அதிகாரமே முக்கியம்; விவசாயிகள் நலன் அல்ல. பா.ஜ.க-அ.தி.மு.க கூட்டணி முறிவு நாடகம் அல்ல; கூட்டணி விவகாரத்தில் ‘இந்தியா’ கூட்டணிதான் நாடகமாடுகிறது. இந்தியா கூட்டணி என்பதே நாடகம்தான்இ இன்னும் முழு வடிவம் பெறவில்லை.

பா.ஜ.கவுடன் இனி கூட்டணி இல்லை என்று தெளிவாக கூறிவிட்டேன். பா.ஜ.க கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. உறுதியாக இருக்கிறோம். அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க பா.ஜ.க நெருக்கடி தந்ததாக கூறுவது தவறு. பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைக்கவில்லை.

அண்ணாமலையை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் என பா.ஜ.க தலைமை எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இத்தனை தொகுதிகள் வேண்டும் என பா.ஜ.க தேசிய தலைமை எந்த நிர்பந்தமும் கொடுக்கவில்லை. அமித்ஷாவோஇ நட்டாவோஇ மோடியோ அ.தி.மு.கவுக்கு எந்த அழுத்தத்தையும் தரவில்லை. என அவர் கூறினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles