NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதமர் தினேஷ் குணவர்தன 4 நாள் விஜயமாக சீனா பயணமானார்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா நோக்கி புறப்பட்டுள்ளார்.

நாளை (16) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன தென் ஆசிய ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியின் விசேட அதிதியாகவும் தினேஷ் குணவர்தன பங்கேற்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது சீனாவின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles