எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அமைக்கப்படும் அரசாங்கத்தின் பிரதமர் பதவி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கும் குழுக்களுக்கு இடையிலும் ஐக்கிய மக்கள் கூட்டணியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவிக்கின்ற குழுக்ளுக்கிடையே ஏற்கனவே 5 மூத்த அமைச்சர்கள் பிரதமர் பதவிக்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.