NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல இசையமைப்பாளரான விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை…!

பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தன்னுடைய இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 ம் தரத்தில் கல்வி பயிலும் இவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில் பெற்றோர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச் சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளில் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலீஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles