(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
புகையிரத சாரதிகள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொழில்சார் நடவடிக்கையினால் இன்று (24) காலை சேவையில் ஈடுபடவிருந்த 11 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
புகையிரத சாரதி சேவையை ஈடுபடுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையின் அடிப்படையில் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக புகையிரத சாரதிகள் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இந்த தொழில் நடவடிக்கை காரணமாக நேற்று (23) இயக்கப்படவிருந்த 8 புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.