NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அம்சங்களுடன் வரவுள்ள 15 PRO!

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 Pro முன்னெப்போதும் இல்லாத புதிய அம்சங்களுடன் சந்தைக்கு வரவுள்ளது. அதில் ஹாப்டிக் இன்ஜின் மூலம் இயங்கக்கூடிய சாலிட் ஸ்டேட் பட்டன்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எனினும் தொழில்நுட்ப காரணங்களால் இந்த அம்சமானது ஐபோன் 15 Proவில் சேர்க்கப்படவில்லை என்று மிஞ்சி கூவோ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த செய்தி வெளியானவுடன், சாலிட் ஸ்டேட். பட்டன் தொழில்நுட்பத்தின் பின்னணியில் உள்ள சரஸ் லாஜிக் இன் ஷேர் வேல்யூ பெரிய அளவில் குறைந்துவிட்டது.

ஐபோன் 14 ப்ரோவில் பயன்படுத்தப்பட்ட இதே போன்ற பட்டன் அமைப்புடன், எந்த ஒரு பெரிய மாற்றமும் இல்லாமல் ஐபோன் 15 Pro வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோவில் சாலிட் ஸ்டேட் பட்டன்கள் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், இதற்கு முந்தைய மாடலுடன் ஒப்பிடுகையில் இதில் பல புதிய அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

எல்லா ஆண்டையும் போல, இந்த ஆண்டும் ஐபோன் 15 Pro போனானது ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 Plus போன்ற பிற வெண்ணிலா மாடல்களுடன் செப்டம்பர் மாதம் வெளியாகும். இவற்றில் USB  Type-C போர்ட், டைனமிக் ஐலாண்டு டிஸ்ப்ளே, A16 பயோனிக் பிராசஸர் மற்றும் 48MP பிரைமரி கேமரா போன்ற அம்சங்கள் வர உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 15 ப்ரோ வில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் : ஐபோன் 15 ப்ரோவின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக சாலிட் ஸ்டேட் பட்டன்கள் கருதப்படும் நிலையில், ஆப்பிளின் அடுத்த ஃபிளாக்ஷிப் மாடலில் லைட்னிங் போர்ட்டிற்கு பதிலாக ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய USB Type C போர்ட் போன்ற இன்னும் பல புதிய அம்சங்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் கண்கவர் விதமாக அமையும் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட இந்த நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் ஐபோன் 15 Pro ஆகும். அதோடு ஆப்பிளின் முந்தைய ஐபோன்களுடன் ஒப்பிடும் பொழுது ஐபோன் 15 Pro குறைந்த எடை கொண்டதாக இருக்கும்.

இதைத்தவிர ஹை ரெசல்யூஷன் Ultra Wide Angle Lense மற்றும் சாம்சங் காலக்சி S23 அல்ட்ராவுடன் போட்டியிட பெரிஸ்கோப் Zoom Lense போன்ற அம்சங்கள் இதன் கேமராவில் காணப்படும். மேலும் ஐபோன் 15 Proவில் 8 GB RAM மற்றும் 256 GB இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles