(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் பிரீமியம் செக்மென்ட்டில் புதிய பைக் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளது.
Honda CL 300 என்ற பைக்கை இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹோண்டா நிறுவனம் அறிமுகம் செய்தது. தற்போது இந்தியாவில் இதற்கான பதிவை செய்துள்ளது.
இந்த பைக் ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துவரும் Honda CL 500 பைக்கின் அதே டிசைன் உள்ளது. இது ஒரு B300R பைக்கின் அதே 286cc லீகுய்ட் கூல்டு என்ஜின் சிங்கள் சிலிண்டர் என்ஜின் இடம்பெற்றுள்ளது.
இந்த பைக்கில் 26BHP பவர் உள்ளது. இதனுடன் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி இருப்பதால் என்ஜின் சிறப்பாக இயங்கும்.Scrambler மற்றும் ரெட்ரோ என இரண்டும் கலந்த டிசைன் கொண்டுள்ளது.
இதில் முன்பக்கம் டெலெஸ்கோபிக் போர்க் வசதி, டூயல் ஷாக் வசதி, முன்பக்கம் மற்றும் பின்பக்க டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ABS வசதி போன்றவை உள்ளன.