NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளத்தில் தொடர்ந்து உயிரிழந்து வரும் காகங்கள் – விசாரணைகள் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

புத்தளத்தில் பல காகங்கள் இறந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காகங்கள் உயிரிழந்தமை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தளம் நகரின் வானா வீதி ஏரிக்கு அருகில் நேற்று (07) காலை முதல் காகங்கள் இறந்து வருகின்றன.

இது தொடர்பில் புத்தளம் மாநகர சபைக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறந்த காக்கைகளின் உடல் உறுப்புகளை பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ள புத்தளம் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles