ஒரு சில திருமணங்களை பார்த்தால் இப்படியும் நடக்குமா? என்று நம்மை ஒருகணம் வியப்பில் ஆழ்த்துபவையாக இருக்கின்றன.
அப்படிப்பட்ட ஒரு வினோதமான திருமணத்தைதான் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயதான ஃபெலிசிட்டி காட்லெக் என்ற பெண்மணி செய்துள்ளார்.
இவர் இரண்டு பேரை திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவரும் மனிதர்கள் அல்ல. பேய் பொம்மைகள். அந்த பொம்மைகளில் ஒரு பெண் பொம்மை. ஒரு ஆண் பொம்மை உள்ளடங்குகின்றன.
இவர் உயிரற்ற பொருட்கள் மீது தீரா காதல் கொண்டவர். அதாவது, Object Sexual என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார்.
ஹலோவீன் பொருட்கள் விற்கும் தளத்தில் தான் கண்ட பொம்மைகள் மீது இவர் காதலில் விழுந்ததாக கூறியுள்ளார்.
ஃபெலிசிட்டி சரியாக ஆறு வருடங்களுக்கு முன்பு கெல்லி ரோஸி எனும் பெண் பேய் பொம்மையுடன் தனது முதலாவது திருமணத்தை செய்து கொண்டார். தற்போது ஆண் பொம்மையான ரொபர்ட்டை திருமணம் செய்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் இவர்கள் மூவருக்கும் 10 பொம்மை குழந்தைகளும் உள்ளன.
இவ்வாறு ஃபெலிசிட்டி பொம்மைகளுடன் வாழ்வதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஏதேனும் கருத்து தெரிவித்தாலோ அல்லது அவதூறாக பேசினாலோ இவர் அதை காதில் வாங்காமல், தனது பொம்மை குடும்பத்தை வெளியே அழைத்துச் செல்வாராம். மேலும் இதுபோல் பொம்மைகளுடன் வாழ்வதில் தனக்கு எதுவித பிரச்சினையும் இல்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.