(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொது பாதுகாப்பு அமைச்சின் 118 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த எண்ணுக்கு பொதுமக்களிடம் இருந்து வரும் அழைப்புகள் உரிய முறையில் பரிசீலிக்கப்படும் என்றும் அதன் பிறகு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.