NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பொலிஸ் நிலையத்துக்குள் கைதிகளுக்கு நஞ்சூட்டல்!

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது

கொழும்பு – ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் இருவர் இனந்தெரியாத நபர் ஒருவர் வழங்கிய கடும் நஞ்சு கலந்த பால் பொதிகளை அருந்தி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற ஜிந்துப்பிட்டிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என அடையாளம் காணப்பட்ட நபர், அதற்கான புலனாய்வு தகவல் வழங்கிய நபர் ஆகியோரே இவ்வாறு ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (07) நண்பகல் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் கூண்டின் அருகே வந்து கைதிகள் இருவருக்கும் இரண்டு பாக்கெட் பால் கொடுத்துள்ளார்.

அதனை அருந்தியவுடன் கைதிகளில் ஒருவர் உடனடியாக மயங்கி வீழ்ந்துள்ளார். சற்று நேரத்தில் மற்றவரும் மயங்கி வீழ்ந்துள்ளார்

அதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் அவர்கள் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்ததாக கூறப்படும் நபர் குறித்த தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சந்தேக நபர்கள் இருவருக்கு பொலிஸ் நிலையத்தில் வைத்தே நஞ்சு கலந்த பால் வழங்கப்பட்டுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles