NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் பிரீமியர் லீக் – டெல்லி அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது.

நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.

சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles