ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒக்டோபர் 3ஆம் திகதி மகளிருக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்மன்பிரீத் கவுர் அணித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், மகளிர் T20 உலகக் கிண்ண தொடருக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
ஒக்டோபர் 4ஆம் திகதி இந்திய அணி தனது முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
ஒக்டோபர் 6ஆம் திகதி பாகிஸ்தான் அணியுடனும், 9ஆம் திகதி இலங்கை அணியுடனும், 13ஆம் திகதி அவுஸ்திரேலியா அணியுடனும் இந்தியா மோதவுள்ளது.
ஒக்டோபர் 20ஆம் திகதி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது.
கிண்ணத்தை வெல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.19.60 கோடியும் இரண்டாம் இடம் பெறும் அணிக்கு ரூ. 9.80 கோடியும் அரையிறுதிக்குத் தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.