NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மகளிர் T20 உலகக் கோப்பை – மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி!

9ஆவது மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. நிகர் சுல்தானா அதிகமாக 39 ஓட்டங்களை எடுத்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் கரீஷ்மா 4 விக்கெட்டும், பிளெட்சர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து, 104 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 12.5 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்ற இரண்டாவது வெற்றி இதுவாகும்.

Share:

Related Articles