மட்டக்களப்பில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக முதல் முதலில் இன்று திங்கட்கிழமை (07) கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாள் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இன்று திங்கட்கிழமை மட்டக்களப்பு கச்சேரியிலுள்ள தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் காரியாலயத்துக்கு தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்கள் சகிதம் சென்று வேட்பு மனுதாக்கல் செய்தனர்
இந்த தேர்தலில் சைக்கிள் சின்னத்தில்; போட்டியிடும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களான தர்மலிங்கம் சுரேஸ், சுப்பிரமணியம் சத்தியநாதன், கணவதிப்பிள்ளை குககுமாரராசா, அழகையா தேவகுமார், விஸ்னுகாந்தன் சௌமியா, குமாரசிங்கம் லிவாஸ்கர், முத்துக்குட்டி சத்தியகுமார், விநாயகம் தரணிகரன் ஆகிய 8 பேர் களமிறக்கப்பட்டு போட்டியிடுகின்றனர்
இதில் இருவரை தவிர ஏனைய அனைவரும் புதுமுகங்கள் என்பதுடன் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய 3 தேர்தல் தொகுதியை சேர்ந்தவர்களை முன்னிறுத்தியுள்ளனர்.