NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: பாதுகாப்பு படைகள் குவிப்பு !

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில் நேற்றைய தினம் 5 வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தீவைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரும் திரளான மக்கள் அப்பகுதியில் குவிந்ததால் பதற்றமான சூழல் நிலவியுள்ளதாகவும், இதனையடுத்து அங்கு பாதுகாப்புப் படைகள் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே வேறொரு இடத்தில் வன்முறை கும்பல் பொலிஸாரைத் தாக்கி துப்பாக்கிகளைப் பறித்துச் சென்றுள்ளதாகவும், இதனையடுத்து துப்பாக்கிகளை மீட்கவும் வன்முறையாளர்களைக் கைது செய்யவும் பொலிஸார் தனிப்படைகளை அமைத்துத் தேடிவருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles