NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் பலி!

உத்தரப் பிரதேசம் – ஹத்ராஸ் மாவட்டத்தில் மத வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஹத்ராஸ் அருகே உள்ள ரதிபன்பூரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரே இடத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடிய நிலையில்இ நிகழ்ச்சி முடிந்து வெளியேறும் போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெண்கள்இ குழந்தைகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த நிலையில்இ சரியான முன்னேற்பாடுகள் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு வருவதில் கடும் தாமதமாகி உள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பலர் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில்இ மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் பலி எண்ணிக்கை அதிகமானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share:

Related Articles