NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மனம்பிட்டிய பஸ் விபத்துக்கான காரணம் வெளியானது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பொலன்னறுவை – மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்திற்கு சாரதியின் கவனயீனமே காரணம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பாலத்தில் இருந்து குறித்த பஸ் ஆற்றில் விழுந்தமையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்பொழுது 11ஆக உயர்ந்துள்ளது. மேலும் 40 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதுருவெலயிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ்ஸின்; அதிவேகமும் சாரதியின் கவனக்குறைவுமே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

விபத்தினால் காணாமல் போனவர்கள் தேடும் நடவடிக்கைகளை மீட்புக் குழுவினர் ஆரம்பித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles