NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மரக்கறி விலை விபரம்!

நுவரெலியாவில் கரட் விலை நாள் ஒன்றுக்கு 200 ரூபா வீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நேற்று வரை 850 ரூபாவுக்கு மொத்த விற்பனை விலையில் காணப்பட்ட கரட் இன்று 650 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய காரியாலயத்தின் முகாமையாளர் பண்டார தெரிவித்துள்ளார்.

நாட்டில் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருந்து கரட் உள்ளிட்ட சில மரக்கறிகள் கடந்த இரண்டு தினங்களாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய சந்தைக்கு தாராளமாக கிடைப்பதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மரக்கறிகளுக்கான தட்டுப்பாடுகள் குறைந்து வருவதுடன் விலைகளும் மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நுவரெலியா சந்தையில் இன்று கோவா 520 ரூபா, கரட் 650 ரூபா, லீக்ஸ் 320 ரூபா, ராபு 130 ரூபா, பீட் 470 ரூபா முதல் 570 ரூபா, உருளைகிழங்கு 320 ரூபா, சிவப்பு உருளை கிழங்கு 340 ரூபா, நோக்கோல் 370 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles