NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கம்!

பாராளுமன்ற இணையத்தளத்தில் ஆளும் கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரின் கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, நீதி அமைச்சரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷன நாணயக்காரவின் பெயரின் முன்னால் எழுதப்பட்டிருந்த கலாநிதி என்ற பட்டமே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.

அவைத் தலைவர் காரியாலயத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தின் தகவல்களின் அடிப்படையில் பாராளுமன்ற இணையத்தளத்தில், அமைச்சர் ஹர்ஷனவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் போடப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற இணையத்தளத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரங்கள் சரியான முறையில் எழுதப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள பூரண ஆய்வு நடத்துமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இணையத்தளத்தில் பிழையாக எழுதப்பட்டிருந்த சில விபரங்கள் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னராக சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் பல சர்ச்சைகளுக்குப் பின்னர் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles