மலேரியாவுக்கு எதிரான உலகின் முதல் வழமையான தடுப்பூசி திட்டம் கேமரூனில் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் மலேரியாவுக்கு எதிரான வழமையான தடுப்பூசிகளைத் தொடங்கிய உலகின் முதல் நாடு என்ற பெருமையை கேமரூன் பெற்றுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மலேரியாவின் தாக்கம் காரணமாக ஆப்பிரிக்காவில் 600,000 பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவர்களில் 80 சதவீதமானோர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில், கேமரூனில் 6 மாத வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சுவுளு,ளு தடுப்பூசியை இலவசமாக வழங்குகிறது. இந்த தடுப்பூசியை பிரித்தானியா தயாரித்துள்ளது.