NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மழை – காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும்..

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை மேலும் தொடரும் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இது , தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். தீவின் மீது அவ்வப்போது (30- 40) kmph வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles