NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாணிக்க கங்கையில் முதலைக்கு இரையாகிய நபர்..!

மாணிக்க கங்கையின் பாலத்திற்கு அருகாமையில் நீராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர் நேற்றைய தினம் காலை வேளையில் முதலைக்கு இரையாகி உயிரிழந்துள்ளார்..

குறித்த சம்பவம் நேற்றைய தினம் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

முதலைக்கு இரையான நபரின் சடலம் பொலிஸார் மற்றும் வனஜீவிகள் பாதுகாப்பு அதிகாரிகள் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் ஆள் அடையாள விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.சுமார் 30 முதல் 35 வயது வரையிலான நபர் ஒருவரே இவ்வாறு முதலைக்கு இரையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles