மீண்டும் உலகம் ஒரு பெருந்தொற்றுக்கு தயாராக வேண்டியது தேவை என உலக சுகாதார மைய தலைவர் டெட்ரோஸ் அதனோம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த பெருந்தோற்றுக்கு தயாராக வேண்டியது தேவை. இது கொரோனா பெருந்தொற்றைவிட கொடியதாக இருக்கும்.
கொரோனா உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவு என்பது உலகளாவிய கொரோனா சுகாதார அச்சுறுத்தல் முடிவுக்கு வந்தது என்பதில்லை. நோய் மற்றும் மரணத்தின் அளவை அதிக அளவில் ஏற்படுத்தும் மற்றொரு உருமாற்றம் அச்சுறுத்தல் உள்ளது. அடுத்த தொற்று நம் கதவை தட்டும்போது ஒன்றாக இணைந்து அதை எதிர்கொள்வதற்கு நாம் தயராக இருக்க வேண்டும். 76ஆவது உலக சுகாதார மாநாட்டில் டெட்ரோஸ் அதனோம் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.