கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 12 ஆயிரத்தினால் அதிகரித்துள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் 72 ஆயிரத்து 903 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த வருடத்தில் இதுவரையில் 85 ஆயிரத்து 636 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இதுவரை 50 பேர் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.