NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மீண்டும் முதலிடத்தில் பாகிஸ்தான் !

ஆசிய கிண்ணம் மற்றும் தென்னாப்பிரிக்கா – அவுஸ்ரேலியா தொடர் முடிவடைந்துள்ள நிலையில் ஐசிசி ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியுடன் இடம்பெற்ற ஒருநாள் தொடரை அவுஸ்ரேலிய அணி இழந்த நிலையில் பாகிஸ்தான் அணி மீண்டும் முதலிடத்திற்கு திரும்பியுள்ளது.

இலங்கைக்கு எதிரான ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றாலும், தற்போது ஒருநாள் தரவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போது, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகளும் 115 புள்ளிகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

இருப்பினும், பாகிஸ்தான் தசம புள்ளிகளில் முன்னிலையில் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலிய அணி தரவரிசையில் 113 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திற்கும் பின்தள்ளப்பட்டுள்ளது.

மேலும் ஒருநாள் சர்வதேச தரவரிசையில் இலங்கை அணி எட்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles