NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முதன்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடிய யுக்ரேனியர்!

யுக்ரைன் மக்கள் முதல்முறையாக டிசம்பர் மாதத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.

யுக்ரைன் மக்கள் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்த நிலையில், தற்போது டிசம்பர் 25ஆம் திகதி முதல்முறையாக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.

ஜூலியன் நாட்காட்டி மற்றும் ரஷ்ய அரசின் பாரம்பரிய முறைப்படி, ரஷ்யாவில் ஜனவரி மாதம் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரஷ்ய கண்டத்தில் உள்ள உக்ரைனும் ரஷ்யாவின் பாரம்பரிய விதிமுறைகளுக்குட்பட்டு ஆண்டுதோறும் ஜனவரி 7ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்தது.

இந்நிலையில், யுக்ரைன் – ரஷ்யா இடையிலான போரின் எதிரொலியாக யுக்ரைனுக்கு புதிய விதிமுறைகளை அந்நாட்டு ஜனாதிபதி வெலாடிமீர் ஸெலென்ஸ்கி கடந்த ஜூலை மாதம் அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரஷ்ய பாரம்பரிய முறையைத் தவிர்த்து மேற்கத்திய அல்லது கிரிகோரியன் நாட்காட்டியின் படி டிசம்பர் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகையை உக்ரைன் மக்கள் கொண்டாடினர்.

இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஸெலென்ஸ்கி நேற்று முன்தினம் (24) அறிவித்திருந்தார்.

அதில் நாட்டு மக்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்ததாவது ”அனைத்து யுக்ரைன் மக்களும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட வேண்டும். ஒரே நாளில், ஒரு பெரிய குடும்பமாக, ஒரே நாடாக நாம் ஒன்றிணைய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles