கடும் பொருளாதார வீழ்ச்சியால் இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருந்த போது நாட்டை பொறுப்பேற்ற ரணில் விக்கரமசிங்க தனது ஜனாதிபதி பதவிக்காலமான 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடக்கம் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரையிலான 26 மாத காலப்பகுதியில் 24 நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர் பதவியேற்ற 2022ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டில் 16 நாடுகளுக்கும் 2024ஆம் ஆண்டில் 4 நாடுகளுக்கும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022 வருடாந்திர செயல்திறன் அறிக்கைக்கு ஏற்ப குறித்த ஆண்டுக்காக ஜனாதிபதி செயலகத்தால் அதி உயர் பிரமுகர்களுக்கான பயணங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை 62 மில்லியன் ரூபாய் எனும் நிலையில் அதில் 59 மில்லியன் ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது.
அது ஒதுக்கப்பட்ட தொகையில் 95 வீதம் ஆகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.