NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 101ஆவது ஜனன தினம் இன்று!

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101ஆவது பிறந்தநாள் இன்று (03) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசு சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் தலைவர்கள் பலரும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவருடன் அமைச்சர்கள் உதயநிதி, பொன்முடி, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், கேஎன்.நேரு போன்றோரும், கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் போன்ற திமுக எம்பிக்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

முன்னதாக, இன்று காலை சென்னை கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதி திருஉருவ படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் மெரினாவிலுள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்றார்.

தொடர்ந்து சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் ‘தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் – 2024’ என்ற புத்தகத்தை  ஸ்டாலின் வெளியிட்டுவைத்தார்.

Share:

Related Articles