கடந்த வருடம் ஜூலை 9ஆம் திகதி அன்று கொழும்பில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீவைக்க வழிவகுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவுக்கு நேற்று பிணை வழங்கப்பட்டது.
பிணைத் தொகை 20,000 ரூபா மற்றும் தலா 5 மில்லியன் ரூபாவாக்கான இரண்டு சரீரப் பிணைகள் வழங்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த வழக்கில் ரங்காவை சந்தேக நபராகப் பெயரிட்டுள்ளதுடன், அவர் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதாகவும், சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதற்கு உதவியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.