வட ஆபிரிக்க நாடான மொரோக்கோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 2,012 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் , 2,059 பேர் காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளன.
இந்த கோர நிலநடுக்கத்தினால் பலியானவர்களுக்கு இந்தியா, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள மதீனா என்ற சிவப்பு சுவர்களும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளது.
இது குறித்த காட்சிகள் அங்குள்ள சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அல்ஜீரியா, போர்ச்சுகல் போன்ற அண்டை நாடுகளிலும் இதன் தாக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.