NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் சைக்கிள் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்து – இஸ்ரேலிய பிரஜை பலி

பொத்துவில் – அக்கரைப்பற்று வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இஸ்ரேலிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து நேற்று (07) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த உழவு இயந்திரத்தின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 23 வயதான இஸ்ரேலியர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles