NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தை – மகன் பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

அநுராதபுரத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் தந்தையும் மகனும் நேற்று (19) உயிரிழந்துள்ளனர்.

அநுராதபுரம் – மதவாச்சி பிரதேசத்தில் நேற்றுஇரவு 08 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் திருகோணமலையை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற என்ற 22 வயதுடைய மகன் சம்பவ இடத்திலும், 48 வயதுடைய தந்தை சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles