அதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக கருதப்படும் யால வனத்தின் இயற்கை சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தி பாரிய சேதத்தை ஏற்படுத்தி கஞ்சா பயிரிட்ட 5 பேரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
நேற்று (27) கதிர்காமம் பொலிஸ் பிரிவில் யால பாதுகாக்கப்பட்ட வனத்தில் வெஹெரகல பகுதியில் 4 சுற்றிவளைப்புகளை முன்னெடுத்தபோதே குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பில் பயிரிடப்பட்டிருந்த சுமார் 4 ஏக்கரில் 250,000 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் எம்பிலிபிட்டிய, வெல்லவாய மற்றும் பனாமுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.