(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
யுக்ரைனுக்கு எதிரான ரஷ்ய படையெடுப்பு ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது.
இந்நிலையில், 1945ஆம் ஆண்டு 2ஆம் உலக போரில் ஜெர்மனியின் நாஜி படையை தோற்கடித்த வெற்றி கொண்டாட்ட தினம் ரஷ்யாவில் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
இதையடுத்து, பல மாதங்களுக்குப்பின், யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள பக்முத் நகரில் ரஷ்யப்படைகள் கடுமையாக தாக்கின.
இந்த தாக்குதலில் அர்மன் சோல்டின் என்ற பிரான்ஸ் பத்திரிகையாளர் பலியாகியுள்ளார்.
யுக்ரைன் போர் தொடங்கியது முதல் இதுவரை 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.