NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ராஜஸ்தான் அணி அதிர்ச்சித் தோல்வி!

IPL கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இடம்பெற்ற 50வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.

அதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- அபிஷேக் சர்மா களமிறங்கினர். ராஜஸ்தானின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அபிஷேக் 12 ஓட்டங்களுடனும் அன்மோல்பிரீத் சிங் 5 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.

இதனையடுத்து டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ் ரெட்டி ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடி ஸ்கோரை உயர்த்தினர். மெதுவாக விளையாடிய ஹெட் 44 பந்தில் 58 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளாசன் அவர் பங்குக்கு அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் அதிரடி காட்டிய நிதிஷ் அரை சதம் விளாசி அசத்தினார்.

இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நிதிஷ் ரெட்டி 76 ஓட்டங்களுடனும் கிளாசன் 42 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதன்படி 202 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஒரு ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles