NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரூ.10 ஆயிரம் கொடுத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி அழித்த வாடிக்கையாளர் !

சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு சென்ற வாடிக்கையாளர் கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை பற்றி கேட்டபோது அவர் ஒரு கிண்ணம் நூடுல்ஸ் இந்திய மதிப்பில் ரூ.164 என கூறியுள்ளார்.

அதை கேட்ட வாடிக்கையாளர் விலை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். இதுதொடர்பாக வாடிக்கையாளருக்கும், விற்பனையாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது விற்பனையாளரின் மகன் எழுந்து வந்து வாடிக்கையாளரிடம்இ உங்களால் அதை வாங்க முடியாது என்றால் வெளியே போங்கள் என ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் தான் அவமானப்படுத்தப்பட்டது போன்று உணர்ந்துள்ளார்.

உடனே அவர் கடைக்காரரிடம் கடையில் உள்ள அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளும் சேர்ந்து என்ன விலை என கேட்டார். அதற்கு அவர் ரூ.9,920 என கூறியுள்ளார்.

உடனே அந்த பணத்தை கொடுத்து அனைத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளையும் வாங்கிய வாடிக்கையாளர் அவை அனைத்தையும் தரையில் அடித்து நொருக்கி அழித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles