NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லிட்ரோ எரிவாயு விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைப்பு – புதிய விலைகளும் அறிவிப்பு…!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்படட்டுள்ளதுடன் அதன் புதிய விலைகளையும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோ கிரேம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2 ஆயிரத்து 982 ரூபாவகும்.

5 கிலோ கிரேம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 83 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ஆயிரத்து 198 ரூபாவாகவும், 2.3 கிலோ கிரேம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 37 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 561 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமையல் எரிவாயு விலை குறைப்புடன், உணவுகளின் விலை குறைக்கப்படுவது குறித்து இன்று அறிவிக்கப்படும் என ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உணவு விலை குறைப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத், உணவுப் பொருட்களின் விலையை கட்டாயம் காட்சிப்படுத்த வர்த்தக அமைச்சர் தீர்மானித்துள்ளதாகவும், இது தொடர்பில் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் இன்று முதல் நாட்டில் குறைக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளை நிச்சயம் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles