NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று (07) நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 31ஆம் திகதி, மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத மகிழுந்து ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார். 

கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். 

அவரை இன்று (07) வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles