வடக்கு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள துறைமுகத்தை, இலங்கை முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய மாலைத்தீவு அதிகாரிகள் விருப்பத்துடன் உள்ளதாக இலங்கை – மாலைத்தீவு வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மாலைத்தீவு வர்த்தக சபையின் தலைவர் சுதேஷ் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக இலங்கையில் இருந்து மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத வரி நிவாரணத்தை வழங்க அந்த நாட்டு அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு பகுதியில் துறைமுக திட்டத்தை முன்னெடுக்க மாலைத்தீவு துறைமுக அதிகாரிகள் ஆர்வத்துடன் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.