கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 3 இலட்சத்து 264ஆக அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31 வரை, மொத்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை 9 இலட்சத்து 97 ஆயிரத்து 858ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை 31ஆம் திகதி இந்த எண்ணிக்கை 13 இலட்சத்து 14 ஆயிரத்து 122ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசெம்பர் 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 8 இலட்சத்து 79 ஆயிரத்து 778 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 18 ஆயிரத்து 80 ஆகவும் காணப்பட்டது.
இந்த ஆண்டு ஜூலை 31 வரை வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 11 இலட்சத்து 82 ஆயிரத்து 210 ஆகவும், மற்ற வரி செலுத்துவோர் எண்ணிக்கை 13 இலட்சத்து ஆயிரத்து 910 ஆகவும் அதிகரித்துள்ளது.