NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகை!

இந்த மாதத்தின் கடந்த 9 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 36 ஆயிரத்து 877 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இந்தியாவிலிருந்து 10 ஆயிரத்து 857 பேரும் சீனாவிலிருந்து 3,105 பேரும், ஜேர்மனியிலிருந்து 2,425 பேரும் நாட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

அதேநேரம், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 15 இலட்சத்து 21 ஆயிரத்து 685 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles