NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கான அபராத தொகை அதிகரிப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டில் விசா காலத்தை மீறி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

அபராத தொகை, 7 தொடக்கம் 14 நாட்களுக்கு 250 அமெரிக்க டொலர்களாகவும், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் 500 அமெரிக்க டொலர்களாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி, அபராதத்துடன், விசா கட்டணமும் செலுத்தப்பட வேண்டும் என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles