(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
காலை விடிந்ததில் இருந்து எருமை மாடு போல் பணிபுரிவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாளிதழ் ஒன்றுடனான கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
‘நான் காலை விடிந்ததில் இருந்து எருமை மாடு போல் வேலை செய்து வருகிறேன் என்பதை அறிந்த ஊடகங்கள் அதற்கு சரியான விளம்பரம் கொடுக்கின்றன. ஏனென்றால் நான் குளிர் அறைகளில் உட்கார்ந்து வேலை செய்வதில்லை என்பது என்னை அறிந்தவர்களுக்குத் தெரியும். அரசாங்க வேலை பற்றிய விளம்பரம் போதாது என்று நினைக்கிறேன்.
அரசாங்கத்தின் நல்ல செயல்களைப் பற்றி விளம்பரம் செய்வதுடன் குறைபாடுகளை விமர்சிப்பதும் சமநிலையான ஊடகக் கலையின் இன்றியமையாத பகுதியாக நான் நினைக்கிறேன். ஆனால் அந்த சமநிலையான ஊடகக் கலை இன்று வேலை செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளார்.