NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்தில் சிக்கிய நளின் பண்டார MP…!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் இன்று (3) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் ஜீப் வண்டி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த போது வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக நிட்டம்புவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் பயணித்தவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, விபத்து தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles