மித்தெனிய – வலஸ்முல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவர் தனது 2 நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது வீதிக்கு அருகாமையில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளனர்.
சம்பவத்தில் வலஸ்முல்ல பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் உயிரிழந்துள்ளார்.
மேலும் காயமடைந்த ஏனைய இருவரும் எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.