NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விபத்துக்களை ஏற்படுத்தும் வாகன சாரதிகளை இலக்கு வைத்து புதிய வேலைத்திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விபத்துக்களை ஏற்படுத்தும் வாகனங்களின் சாரதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

‘தற்போது வாகன சாரதிகள், மதுபானம் மட்டுமின்றி போதைப்பொருட்களை பயன்படுத்திக்கொண்டு வாகனங்களைச் செலுத்துவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில், இதனை அடையாளம் காணும் வகையில் தேவையான கருவிகளின் உதவியுடன் மதுபானம் மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்காலத்தில் வீதி விபத்துகள் ஏற்பட்டால் உரிய சாரதிகள், மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டாரா என மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இது தொடர்பில் போக்குவரத்துப் பிரிவின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்த கலந்துரையாடல்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவாரட என்பதுடன், இவ்விடயம் தொடர்பில் உருவாக்கப்பட வேண்டிய பல திட்டங்கள் தற்போது ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ விளக்கமளித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles